Vallalar Songs

ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே

 ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய் 

உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே 
ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும் 

ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச் 
சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த 

சத்தியனே உண்கின்றேன்() சத்தியத்தெள் ளமுதே   
 () உணர்கின்றேன் - ச மு க பதிப்பு